சுடச்சுட

  

  ’சுதந்திரமாக பேசுவதை ஆதரிக்கிறேன்; ஆனால், அவை சட்ட வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும்' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
  கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மகள் குர்மெஹர் கௌர், தனது தந்தை இறந்தது பாகிஸ்தான் ராணுவத்தால் அல்ல; போரினால்தான் என்று தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது.
  இந்த சூழலில் பாரிக்கர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) சார்பில் தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:
  கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கலாம் என்பதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளையில், அத்தகைய கருத்தானது சட்ட வரம்புக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். இந்தக் கருத்தை எந்தவொரு சம்பவத்தையும் தொடர்புப்படுத்தி நான் கூறவில்லை.
  ராணுவ ஆள்சேர்ப்புக்கு நடைபெற இருந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களைப் பார்த்தேன்.
  எந்த வகையான அணு மற்றும் ரசாயனத் தாக்குதலையும் முறியடிக்க நமது ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் மனோகர் பாரிக்கர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai