Enable Javscript for better performance
திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வந்த செல்லாத நோட்டுகள் எவ்வளவு தெரியுமா..?- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வந்த செல்லாத நோட்டுகள் எவ்வளவு தெரியுமா..?

    By DIN  |   Published on : 03rd March 2017 12:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rupees

    திருப்பதி: திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வந்துள்ள ரூ. 4 கோடி செல்லாத பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் திணறிவருகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர அதிரடியாக உயர்மதிப்புடைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதனை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளவும் என அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்திய பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.4 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அரசாங்கத்தின் விதிப்படி, செல்லாத நோட்டுகளை 10 மேல் வைத்திருந்தால், குறைத்தபட்ச அபராதமாக 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பதால் உண்டியலில் இவ்வளவு நோட்டுகள் குவிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  

    ரூ.4 கோடி செல்லாத நோட்டுகள் உள்ளதால், இவற்றை என்ன செய்வது என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருப்பதாக தேவஸ்தான நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai