திஹார் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: 11 பேர் காயம்
By DIN | Published on : 03rd March 2017 01:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுதில்லி: தில்லியில் உள்ள திஹார் சிறையில் நேற்றிரவு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை திஹார் சிறைச்சாலை. இங்கு குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகள், விசாரணைக் கைதிகள் என ஆயிரக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவும் கைதிகள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில், 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதிகளுக்கு இடையே பயங்கர வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.