சுடச்சுட

    

    பர்தா அணிந்த வாக்காளர்களை அடையாளம் காண பெண் காவலர்கள்: பாஜக கோரிக்கை

    By DIN  |   Published on : 03rd March 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பர்தா அணிந்து வரும் வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கு பெண் காவலர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரப் பிரதேசத்தில் எஞ்சியுள்ள 6-ஆவது, 7-ஆவது கட்ட தேர்தலில் பர்தா அணிந்து வரும் பெண் வாக்காளர்களை அடையாளம் காண்பதற்காக, பதற்றமான வாக்குச் சாவடிகளில் பெண் காவலர்கள், துணை ராணுவப் படையினர் ஆகியோரை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்த வேண்டும்.
    பர்தா அணிந்த பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க இருப்பதால், கள்ள வாக்குகள் பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. போதுமான அளவில் பெண் காவலர்களை நியமித்தால், கள்ள வாக்குகள் பதிவாவது தடுக்கப்படும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai