சுடச்சுட

  

  பிகார் பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டாவது நாளாக அமளி

  By DIN  |   Published on : 03rd March 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தானை பதவி நீக்கம் செய்யக் கோரி பிகார் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர்.
  பிகார் கலால் - மதுவிலக்குத் துறை அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தான். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைக் கண்டித்து கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை காலணியால் அடிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மஸ்தான் கூறினார். இதையடுத்து, போராட்டக்காரர்கள் சிலர் மோடியின் புகைப்
  படத்தை காலணியால் அடித்தனர்.
  இந்தக் காட்சிகள் அடங்கிய விடியோ, பிகாரில் உள்ள ஓர் உள்ளூர் தொலைக்காட்சியில் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  இதையடுத்து, பிரதமரை இழிவுபடுத்திய மஸ்தானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி பிகாரில் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  தொடரும் அமளி: அமைச்சர் மஸ்தானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல்கள் முடங்கின.
  இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், சட்ட மேலவையிலும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
  ஆளுநரிடம் மனு: இந்தச் சூழலில், அமைச்சர் மஸ்தானை பதவிநீக்கம் செய்யுமாறு மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்திடம் பாஜக உயர்நிலைக் குழுவினர் வியாழக்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து சுஷில்குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ’பிரதமரை அவமதித்த அமைச்சர் மஸ்தானை முதல்வர் நிதீஷ் குமார் இன்னமும் பதவி நீக்கம் செய்யவில்லை; எனவேதான், ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்' என்றார்.
  போலீஸில் புகார்: இதற்கிடையே, அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தான் மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோட்வாலி காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ நித்தின் நவீன் புகார் அளித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai