சுடச்சுட

  

  பிருஹன் மும்பை மேயர் தேர்தல்: சிவசேனை, பாஜகவுக்கு ஆதரவில்லை: தேசியவாத காங்கிரஸ்

  By DIN  |   Published on : 03rd March 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ’பிருஹன் மும்பை மேயர் தேர்தலில் சிவசேனைக்கோ, பாஜகவுக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது'' என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  மகாராஷ்டிரத்தில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு சிவசேனைக்கு தைரியமில்லை.
  தங்களது கட்சிப் பத்திரிகையில் (சாம்னா) மட்டும் பாஜக அரசை எதிர்த்து சிவசேனை எழுதினால் போதாது. உண்மையிலேயே எதிர்ப்பது எனும்பட்சத்தில், அரசுக்கான ஆதரவை அந்தக் கட்சி விலக்கிக் கொள்ள வேண்டும்.
  எனினும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சிவசேனையும், பாஜகவும் இணைந்தே செயல்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் இடைக்காலத் தேர்தல் வருவதற்கான சூழல் இல்லை.
  முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸுடன் விவாதிக்கவில்லை என்றார் சுனில் தட்கரே.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai