சுடச்சுட

    

    பெப்சி, கோக் புறக்கணிப்பு ஜனநாயக விரோதம்: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

    By DIN  |   Published on : 03rd March 2017 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pepsicoc

    புது தில்லி: தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் புறக்கணிப்பு என்பது ஜனநாயக மதிப்புகளுக்கு விரோதமானது. இதனால், கள்ளசந்தைக்கே வழிவகுக்கும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக தன்னெழுச்சியாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
    அப்போது, அயல்நாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, அயல்நாட்டு பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்குவதில்லை என்றும், அருந்துவதில்லை என்றும் முடிவெடுத்து அதனை அனைத்து சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.

     இதையடுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர், மார்ச் 1-ஆம் தேதி முதல் அயல்நாட்டு குளிர்பானங்களை அனைத்துக் கடைகளில் விற்கமாட்டோம் என்று அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் கடைகளில் கோக், பெப்சி பானங்கள் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. மக்களும், 15 லட்சம் வணிகர்களும் பெப்சி, கோக் பானங்களின் விற்பனையை முழுமையாக புறக்கணித்து வருகின்றன.

    இந்நிலையில், தமிழகத்தில் பெப்சி, கோக் புறக்கணிப்பு என்பது, நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு விரோதமானது. இது கள்ளச் சந்தையைத்தான் ஊக்குவிக்கும். இந்த விவகாரத்தின் பின்புலத்தில் அரசியல் இருக்கிறது.

    இந்த குளிர்பானங்கள் தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், தடை செய்தால், கள்ளச் சந்தை உருவாகும். ஊழலை வளர்க்கும். ஜனநாயக நாடு என்ற முறையில் தாங்கள் விரும்புவதை சாப்பிட, பருக மக்களுக்கு உரிமை இருக்கிறது என தெரிவித்தார்.

    மேலும் "மேக் இந்தியா திட்டத்தில்" தயாரிக்கப்படும் கோக், பெப்சி புறக்கணிப்பு என்பது அந்த திட்டத்துக்கே எதிரானது என இந்திய குளிர்பானங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai