சுடச்சுட

  

  "பெப்சி, கோக் புறக்கணிப்பு மேக் இன் இந்தியா திட்டத்துக்கு விரோதமானது"

  By DIN  |   Published on : 03rd March 2017 12:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pepsicoc

  புதுதில்லி: தமிழகத்தில் பெப்சி, கோக் புறக்கணிப்புக்கு இந்திய பானங்கள் தயாரிப்பாளர்கள் அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
  பெப்ஸி, கோக் குளிர்பானங்கள் மற்றும் அதன் சார்பு குளிர்பானங்கள் விற்பனை புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டு விட்டது.
   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
   அப்போது, அயல்நாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, அயல்நாட்டு பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்குவதில்லை என்றும், அருந்துவதில்லை என்றும் முடிவெடுத்து அதனை அனைத்து சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.
   இதையடுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அயல்நாட்டு குளிர்பானங்களை அனைத்துக் கடைகளில் விற்கமாட்டோம் என்று அறிவித்தார்.
  இதனைத் தொடர்ந்து புதன்கிழமை (மார்ச்.1) முதல் வணிகர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இயக்கப்படும் கடைகளில் விற்கவில்லை. வெளி நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை செயல்படுத்தி வருகின்றனர்.
  இந்நிலையில், இந்திய குளிர்பானங்கள் தயாரிப்பாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு விரோதமானது நுகர்வோர்கள் தங்களின் விருப்பப்படி தேர்வு செய்து நுகரும் பழக்கத்துக்கும் எதிரானது என கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
  மக்கள் எதிர்க்கும் கோக், பெப்சி நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டப்படி விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இங்கு பதிவு செய்யப்பட்டவையாகும். நுகர்வோர்களின் கலாச்சாரத்தையும், உணர்வுகளையும் மதிக்கின்றன. நேரடியாகவும், மறைமுகவும் தமிழகத்தின் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு இரு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன.
  டெலிவரி போன்றவற்றின் மூலம் 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 2 லட்சம் சில்லரை விற்பனையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன.
  இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள சில்லரை விற்பனையாளர்கள் ரூ.400 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai