Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு விவகாரம்: கையிருப்பில் ரொக்கப் பணம் வைத்திருக்க கட்டுப்பாடு வருகிறது- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரம்: கையிருப்பில் ரொக்கப் பணம் வைத்திருக்க கட்டுப்பாடு வருகிறது

    By DIN  |   Published on : 03rd March 2017 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rupees

    மும்பை: தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.3 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக பண பரிமாற்றம் செய்ய தடை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கையில் ரொக்கமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக, ரூ. 2,000 நோட்டும், பிரத்யேக அம்சங்களைக் கொண்ட புதிய ரூ. 500 நோட்டும் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அதிரடியாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பல விதமான அதிரடி அறிவிப்புகள் தினம் தினம் வெளியிடப்பட்டு வந்தது.

    நாட்டில் ரொக்கப் பணப் பரிமாற்றத்தை குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் வங்கிகள் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கு ரூ.150 கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளன.

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) கடந்த ஆண்டு சில பரிந்துரைகள் அளித்திருந்தது. அதில், தனிநபர்கள் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்யவும், கையில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்துக்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்த பரிந்துரைப்படி, ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தனிநபர் ஒருவர் கையில், அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்கும் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி மசோதாவாக தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படலாம் என நிதி அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai