Enable Javscript for better performance
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது தில்லி மெட்ரோ- Dinamani

சுடச்சுட

    

    லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது தில்லி மெட்ரோ

    By DIN  |   Published on : 03rd March 2017 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mettro

    மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணியில் ஒரே மாதத்தில் "யு' வடிவிலான 200 கர்டர்களை நிறுவியதன் மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) இடம் பிடித்துள்ளது.
     நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனத்திற்காக (என்எம்ஆர்சி) நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையேயான 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பால ரயில்வே வழித் தடத்தை அமைக்கும் பணியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) மேற்கொண்டு வருகிறது.
     இந்நிலையில், இதற்காக "யு' வடிவமான சிமிண்ட் கான்கிரீட் கர்டர்களை அமைக்கும் பணியில் டிஎம்ஆர்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 2.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு 200 "யு' வடிவிலான கர்டர்களை ஒரே மாதத்தில் நிறுவுவதற்கு டிஎம்ஆர்சி நடவடிக்கை எடுத்தது.
     இதையடுத்து, இந்தியாவில் மெட்ரோ ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்களிலேயே ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான "யு' கர்டர்களை நிறுவிய நிறுவனமாக டிஎம்ஆர்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
     இதையடுத்து, இதற்கான சான்றிதழ் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மங்கு சிங்கிடம் "லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தின் உதவி ஆசிரியர் ஸ்மிதா ஜோசப் வியாழக்கிழமை வழங்கினார்.
     இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு மே மாதத்தின் போது நொய்டா - கிரேட்டர் நொய்டா ரயில் பாதை மேம்பாலம் அமைக்கும் வழித்தடத்தில் 200 கர்டர்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு கர்டரும் 153 டன் எடை கொண்டவை.
     மேலும், ஒவ்வொரு கர்டரும் 27 மீட்டர் நீளமும் 5.05 மீட்டர் அகலமும் கொண்டது. இவை சிறப்பு வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு நிறுவப்பட்டன.
     இது மிகவும் சவாலான பணியாக அமைந்திருந்தது. எனினும், திறம்படச் செய்து முடிக்கப்பட்டது என்றார் அவர். தூலங்கள் என்பது பாலங்களுக்கு ஆதாரமாக தூண்கள் மீது நிறுத்தப்படும் ரயில் ஓடுபாதையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai