சுடச்சுட

    

    வெறுப்புணர்வை பரப்ப மோடி முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 03rd March 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rahulgandhi

    மக்களிடையே வெறுப்புணர்வைப் பரப்ப பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது:
    மோடி வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறிய அவரது வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். பொய் வாக்குறுதிகளை அளிக்கும் மோடியை அடுத்த மக்களவைத் தேர்தலின்போது மக்கள் மீண்டும் குஜராத்துக்கே திருப்பி அனுப்புவார்கள்.
    மத்திய அரசு விவசாயிகளுக்குத் தேவையான கடன்களை அளிக்கவில்லை. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் இல்லை. பெரிய அளவில் கடனை வாக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடும் தொழிலதிபர்களுக்கு (விஜய் மல்லையா) மட்டுமே கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
    உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai