சுடச்சுட

    

    ஹிமாச்சல முதல்வர் மீதான வழக்கு: எல்ஐசி முகவர் மீது வரும் 8-இல் குற்றப்பத்திரிகை பதிவு

    By DIN  |   Published on : 03rd March 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீதான கருப்புப் பண முறைகேடு தொடர்பான வழக்கில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) முகவர் ஆனந்த் சௌஹான் மீது வரும் 8-ஆம் தேதி குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட உள்ளது.
    ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், முன்பு மத்திய அமைச்சராகப் பதவி வகித்தபோது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் பெருமளவு பணத்தை தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் எல்ஐசி-யின் முகவர் ஆனந்த் சௌஹான் மூலம் முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
    இதையடுத்து, கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆனந்த் சௌஹான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
    பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சௌஹான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களின் பிரதிகளை அவருக்கு அமலாக்கத் துறை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிறப்பு நீதிபதி வீரேந்தர் கோயல் வியாழக்கிழமை மேற்கொண்டார்.
    அப்போது, வழக்கு தொடர்பான முழு ஆவணங்களும் தமக்கு வழங்கப்படவில்லை என ஆனந்த் சௌஹான் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அப்போது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai