சுடச்சுட

    

    11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்

    By DIN  |   Published on : 03rd March 2017 01:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aj

    ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற சிறுவன் தனது 11-வது வயதிலேயே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற 11 வயது சிறுவன் இத்தேர்வில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    இதுகுறித்து சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால் கூறுகையில், தனது 15 வயதில், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பட்டப்படிப்பை படிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சிறு வயதில் இருந்தே, ஏன்... எதற்கு... எப்படி என, மனதில் உதிக்கும் கேள்விகளுக்கு விடை காண்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் அகஸ்தியா ஜெய்ஸ்வாஸ், ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கும் திறன் பெற்றவர்.

    அகஸ்தியா ஜெய்ஸ்வால், சர்வதேச டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நைனா ஜெய்ஸ்வாலின் இளைய சகோதரர். நைனா ஜெய்ஸ்வாலின் 13வது வயதில், மாஸ் கம்யூனிகேஷன் கல்வியில் பட்டம் பெற்று, இந்தியாவில் மிகக் குறைந்த வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai