சுடச்சுட

    
    Pchidambaram

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உலகிலேயே அறிவுஜீவிகளுக்கு மிகவும் எதிரானது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
    தில்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக, நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென்னை மத்திய அரசு விமர்சித்துள்ளது.
    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு அவர் தகுதியற்றவர் என்று மத்திய அரசு கருதுகிறது. மேலும், ஹார்வர்டு, ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் பயனற்றவை என்றும் மத்திய அரசு கருதுகிறது.
    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் மந்தமாகிவிட்டதை அரசின் தகவல் குறிப்புகளே தெரிவிக்கின்றன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துவிட்டதை நான்காவது காலாண்டு வருமானம் மேலும் உறுதிசெய்யும். எனது கணிப்பில், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றார் ப.சிதம்பரம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai