Enable Javscript for better performance
இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் மாநாட்டில் ஹமீது அன்சாரி பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் மாநாட்டில் ஹமீது அன்சாரி பங்கேற்பு

    By DIN  |   Published on : 04th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 7) நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் சங்கத்தின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்கவுள்ளார்.
    இந்தியப் பெருங்கடலையொட்டிய இந்தியா, வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 21 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச அமைப்புதான் இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் சங்கம் (ஐஓஆர்ஏ). இந்த சங்கத்தின் மாநாடு வரும் செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது.
    இந்தியப் பெருங்கடலையொட்டிய நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai