சுடச்சுட

    

    இந்தியாவுக்கு அதிநவீன ஆளில்லா உளவு விமானங்களை உடனடியாக விற்க வேண்டும்: அமெரிக்க அரசுக்கு செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 04th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக ’கார்டியன்' ரக அதிநவீன ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு உடனடியாக விற்க வேண்டும் என்று அமெரிக்க அரசை அந்நாட்டு நாடாளுமன்ற செனட் அவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை உறுப்பினர்கள் மார்க் வார்னரும் (ஜனநாயக கட்சி), டான் சல்லிவனும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
    இந்தியாவை முக்கிய பாதுகாப்பு தளவாட கூட்டாளியாக ஒபாமா தலைமையிலான முந்தைய அமெரிக்க நிர்வாகமும், நாடாளுமன்றமும் அங்கீகரித்ததன்மூலம், இருதரப்பு நல்லுறவு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, தென்சீனக் கடல் விவகாரத்தில் இணைந்து செயல்பட வேண்டும். பொதுவான நன்மை தரும் விவகாரங்களில், இருநாடுகளும் இணைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    புலனாய்வுத் துறையில் இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான உறவு உள்ளது. காஷ்மீர் பதற்றத்தின் பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானின் பங்கு, அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளைக் கண்டு இருநாடுகளும் கவலையடைந்துள்ளன. பயங்கரவாத அமைப்புகளை வித்தியாசப்படுத்தி பார்க்காமல் அனைத்து அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செனட் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
    ’கார்டியன்' ஆளில்லா விமானங்கள் மூலம், உளவு மட்டும் பார்க்காமல், தரையில் உள்ள இலக்குகள், எதிரிகள் மீதும் தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai