சுடச்சுட

    

    உத்தர பிரதேசம் ஆறாவது கட்ட சட்டசபை தேர்தல்: 11 மணி வரை 23% வாக்குப்பதிவு!     

    By DIN  |   Published on : 04th March 2017 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    up_polls

     

    இன்று நடைபெறும் உத்தர பிரதேச ஆறாவது கட்ட சட்டசபை தேர்தலில் காலை 11 மணி வரை 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஏழு கட்டமாக நடைபெற்று வரும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப் பதிவு இன்று  நடைபெறுகிறது. 

    இந்த ஆறாவது கட்ட தேர்தலில் ஏழு மாவட்டங்களில் உள்ள 49 தொகுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  

    அதிகபட்சமாக கோரக்பூர் சிட்டி பகுதியில் உள்ள ஒன்பது தொகுதிகளில் 127 பேரும், குறைந்த பட்சமாக மவு  மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் கோனா தொகுதியில் ஏழு பேரும் போட்டி போடுகின்றனர். இவர்கள் தவிர 175 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.

    இதில் காலை 11 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai