சுடச்சுட

    

    உத்திர பிரதேசத்தில் 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    By DIN  |   Published on : 04th March 2017 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மௌவ், கோரக்பூர், குஷிநகரம், தேவ்ரியா, ஆஸம்கர், பல்லியா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு சனிக்கிழமை 6-ம் கட்டமாகத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது>
    இன்றைய தேர்தலில் 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.72 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 94.60 லட்சம் பேர் ஆண்கள். 77.84 லட்சம் பேர் பெண்கள்.
    ஆஸம்கர் மக்களவைத் தொகுதியில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்தலில் சமாஜவாதி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதற்கு அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் தீவிர பிரசாரம் முக்கிய காரணம். ஆனால், இந்த முறை அவர் ஒருமுறை கூட இங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
    49 தொகுதிகளில் பாஜக 45 இடங்களிலும், எஞ்சிய 4 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (1), சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் (3) போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் 49 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சமாஜவாதி கூட்டணியில் அக்கட்சி 40 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai