சுடச்சுட

  

  உ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம்?: விமான நிலையங்களில் உஷார் நிலை

  By DIN  |   Published on : 04th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gayatriprajapati

  பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் காயத்ரி பிரஜாபதி வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான காயத்ரி பிரஜாபதிக்கும், அவரது உதவியாளர்களுக்கும் எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்தது. எனினும், அவர்களுக்கு எதிராக அந்த மாநில காவல் துறை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
  இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தை அணுகி நியாயம் கோரினார்.
  இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உத்தரவிட்டது.
  அதனைத் தொடர்ந்து, காயத்ரி பிரஜாபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானார்.
  இந்தச் சூழலில் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
  இதையடுத்து, அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
  பிரஜாபதியை தப்பிச் செல்லவிடமால் தடுக்குமாறு உத்தரப் பிரதேச-நேபாள எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராஷ்ட்ரீய சீமா பல் (எஸ்எஸ்பி) வீரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  ’அகிலேஷ் வீட்டில் பிரஜாபதி'-பாஜக: இதற்கிடையே, உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜவாதி தேசியத் தலைவருமான அகிலேஷ் யாதவின் வீட்டில் பிரஜாபதி பதுங்கி இருப்பதாக உத்தரப் பிரதேச பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா குற்றம்சாட்டினார்.
  ’ஒத்துழைப்பு அளிக்கப்படும்'-அகிலேஷ்: இந்நிலையில், பிரஜாபதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதுடன், வழக்கு விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்தார். தனது வீட்டில் பிரஜாபதி பதுங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
  இளம்பெண்ணுக்கு அச்சுறுத்தல்: இதனிடையே, அமைச்சர் பிரஜாபதியால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு உத்தரப் பிரதேச காவல் துறை உயரதிகாரி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
  அந்த இளம்பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai