Enable Javscript for better performance
கட்சி தாவியவர்களுக்கு வாய்ப்பளித்த பாஜக தோல்வி அடையும்: மாயாவதி- Dinamani

சுடச்சுட

    

    கட்சி தாவியவர்களுக்கு வாய்ப்பளித்த பாஜக தோல்வி அடையும்: மாயாவதி

    By DIN  |   Published on : 04th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mayawati1

    கட்சி தாவியவர்களுக்கும், கறை படிந்தவர்களுக்கும் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக தோல்வியைத் தழுவும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜான்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
    கட்சி தாவியவர்களும், குற்றக் கறை படிந்தவர்களும் அதிகம் உள்ள கட்சி பாஜக. இந்த முறை உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் கட்சியின் நீண்ட கால தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல், கட்சி தாவியவர்களுக்கும், குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.
    ஆகையால், பாஜகவினரே அக்கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள். அக்கட்சி தேர்தலில் தோல்வி அடையும். பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் இத்தேர்தலில் வெற்றி பெறும் என்றார் மாயாவதி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai