Enable Javscript for better performance
கான்பூர் ரயில் விபத்தில் ஐஎஸ்ஐ சதி: பிரதமரின் கருத்துக்கு அகிலேஷ் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    கான்பூர் ரயில் விபத்தில் ஐஎஸ்ஐ சதி: பிரதமரின் கருத்துக்கு அகிலேஷ் மறுப்பு

    By DIN  |   Published on : 04th March 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akilesh

    உத்தரப் பிரதேசத்தில் 150க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட கான்பூர் ரயில் விபத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாஜவாதி கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ரயில் தண்டவாள பராமரிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாத நமது ரயில்வே அமைச்சர், கான்பூர் ரயில் விபத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக, பிரதமர் மோடிக்குத் தவறான தகவலை அளித்திருக்கிறார்.
    இந்த விபத்து, உத்தரப் பிரதேசத்தில் நிகழ்த்திருப்பதால் குறைந்தபட்சம், அந்தச் சதி குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எனக்கு தெரிவிக்கப்படவில்லை; பிரதமரின் குற்றச்சாட்டில் உண்மையுமில்லை. மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, பாஜக தலைவர்கள், மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
    பிரதமர் மோடி தனது பணிகளை, இந்த மாநிலத்தில் நிறைவேற்றியிருந்தால், அவரது அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய தேவை இருந்திருக்காது.
    தேசப்பற்றை தில்லியில் காட்டிக் கொண்டிருக்கும் பாஜகவினர், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? இந்த மாநிலத்தில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு சமாஜவாதி அரசுதான் உதவி செய்து வருகிறது என்றார் அகிலேஷ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai