சுடச்சுட

  
  RAJNATH2

  நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
  தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மஹரிஷி, ஐ.பி. உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
  தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராஜ்நாத் சிங், சுமார் 3 வாரங்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
  இதையடுத்து, நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர்.
  5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இது நாட்டின் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai