சுடச்சுட

    

    பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை: ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி நீக்கம்

    By DIN  |   Published on : 04th March 2017 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போபால்: கேரள முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று கூறிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஆர்.எஸ்.எஸ். தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கேரள முதல்வர் கொன்று வருகிறார். எனவே, ஒரு கொலைகார முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். அந்தத் தொகையை எனது சொத்துகளை விற்றுக் கொடுப்பேன் என்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் பேசுவதாக வெளியாகியுள்ள அந்த விடியோ பரபரப்பையும் சர்ச்சையடும் ஏற்டுத்தியது.

    இதற்கு பதிலளித்து பேசிய பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ், முசோலினியிடம் இருந்து தங்களது அமைப்பின் கட்டமைப்பை மேற்கொண்டது. ஹிட்லரிடம் இருந்து சித்தாந்தத்தை பெற்றது என்று கூறினார்.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் படுகொலை, எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. எனவே, உணர்ச்சிவசப்பட்டு அப்படி கூறினேன். நான் அதை திரும்பப்பெறுகிறேன். வருத்தமும் தெரிவிக்கிறேன் என கூறினார்.

    இந்நிலையில், குந்தன் சந்திராவத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஆர்.எஸ்.எஸ். தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai