சுடச்சுட

  

  மசோதாக்களை இறுதி செய்வதற்காக இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

  By DIN  |   Published on : 04th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு வரும் ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வருவதற்கு ஏதுவாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்களை இறுதிசெய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு சனிக்கிழமை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் மத்திய அரசைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவானது தில்லியில் வெள்ளிக்கிழமை கூடி சட்ட அமைச்சகத்தின் கருத்துகள் குறித்து விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்ததாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனி, ஞாயிறு என்று இரு தினங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளபோதிலும், அனைத்துப் பிரச்னைகளும் சனிக்கிழமையே தீர்க்கப்பட்டு விட்டால், மறுநாள் இக்கூட்டத்தை நடத்த வேண்டியதிருக்காது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
  இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ’மாநில ஜிஎஸ்டி மசோதாவானது, மத்திய ஜிஎஸ்டி மசோதாவைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கும். எனினும், மாநில ஜிஎஸ்டி மசோதா தொடர்பான அனைத்து அம்சங்களையும் கவுன்சில் விரிவாக எடுத்துரைக்கும். சம்பந்தப்பட்ட ஷரத்துகள் குறித்து மாநிலங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றைத் தெளிவுபடுத்தவே இந்த நடவடிக்கை' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai