சுடச்சுட

  

  மஜத மாநிலத்தலைவர் குமாரசாமிக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

  By பெங்களூரு,  |   Published on : 04th March 2017 07:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kum

  மஜத மாநிலத்தலைவர் எச்.டி.குமாரசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மஜத மாநிலத்தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி, கடந்த ஒருவாரகாலமாக சித்ரதுர்கா, மைசூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால், மைசூருவில் இருந்து பெங்களூரு திரும்பிய குமாரசாமி, வெள்ளிக்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சைஅளித்து வருகிறது. கடுமையான வெயிலில் பிரசாரத்தில் ஈடுபட்டதாலும், தொண்டர்கள் வெடித்த பட்டாசின் புகையை சுவாசித்ததாலும் குமாரசாமி இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய பிரச்னையால் அவதிப்படுவதாகவும், அவருக்கு சிகிச்சைஅளித்துவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இது குறித்து குமாரசாமியின்மனைவி அனிதா கூறியது: குமாரசாமிக்கு பயப்படும்படியாக எந்த பிரச்னையும் இல்லை. இருமல் மற்றும் காய்ச்சல் நோய்க்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சுத்திணறல் அல்லது இருதய பிரச்னை எதுவும் அவருக்கு தற்போது இல்லை. எனவே, மஜத தொண்டர்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றார் அவர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai