Enable Javscript for better performance
மணிப்பூரில் இன்று முதல்கட்டத் தேர்தல்: உ.பி.யில் 6-ஆவது கட்ட வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூரில் இன்று முதல்கட்டத் தேர்தல்: உ.பி.யில் 6-ஆவது கட்ட வாக்குப்பதிவு

    By DIN  |   Published on : 04th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    poll

    மணிப்பூர் மாநில சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, கிழக்கு இம்பாலுக்கு பாதுகாப்புப் பணிக்காக வரும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள்.

    மணிப்பூர் சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை (மார்ச் 4) முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 6-ஆவது கட்டமாக 49 தொகுதிகளுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
    மணிப்பூர் சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக (மார்ச் 4, மார்ச் 8) தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 1,643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 168 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 19,02,562 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 9,28,573 பேர் ஆண்கள். 9,73,989 பேர் பெண்கள். 45,642 பேர் புதிய வாக்காளர்கள். மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    உ.பி.யில்..: உத்தரப் பிரதேசத்தில் மௌவ், கோரக்பூர், குஷிநகரம், தேவ்ரியா, ஆஸம்கர், பல்லியா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு சனிக்கிழமை 6-ஆவது கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.72 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 94.60 லட்சம் பேர் ஆண்கள். 77.84 லட்சம் பேர் பெண்கள்.
    ஆஸம்கர் மக்களவைத் தொகுதியில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்தலில் சமாஜவாதி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதற்கு அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் தீவிர பிரசாரம் முக்கிய காரணம். ஆனால், இந்த முறை அவர் ஒருமுறை கூட இங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
    49 தொகுதிகளில் பாஜக 45 இடங்களிலும், எஞ்சிய 4 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (1), சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் (3) போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் 49 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சமாஜவாதி கூட்டணியில் அக்கட்சி 40 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai