சுடச்சுட

  

  மணிப்பூர்: மணிப்பூர் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை (மார்ச் 4) காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 38 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் போலீஸ் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  மணிப்பூர் சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக (மார்ச் 4, மார்ச் 8) தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, 1,643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 168 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 19,02,562 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 9,28,573 பேர் ஆண்கள். 9,73,989 பேர் பெண்கள். 45,642 பேர் புதிய வாக்காளர்கள். மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai