சுடச்சுட

    

    இம்பால்:  மணிப்பூர் மாநிலம் சந்தெல் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

    மணிப்பூர் சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக (மார்ச் 4, மார்ச் 8) தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 5 மணியளவில் சந்தெல் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.

    தொடர்ந்து 7.42 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.

    அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மணிப்பூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai