Enable Javscript for better performance
மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்: 84 சதவீத வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்: 84 சதவீத வாக்குப்பதிவு

    By இம்பால்  |   Published on : 04th March 2017 07:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணிப்பூர் சட்டப்பேரவை முதற்கட்டத் தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மணிப்பூர் சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இம்பால் கிழக்கு தொகுதியில் 87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

    மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai