சுடச்சுட

  

  மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தல்: 10 மணி வரை 29% வாக்குப் பதிவு!     

  By DIN  |   Published on : 04th March 2017 12:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  manipur_polling

   

  இம்பால்: இன்று நடைபெறும் மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 10 மணி வரை 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  இந்த முதல் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  

  இன்றைய தேர்தலில் 529 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகவும், 837 சாவடிகள் உயர் பதட்ட  நிலையில் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.   

  நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாக்காளர்களின் வரிசையில் பெண்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.

  இதில் காலை 10 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai