சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 7 மாவட்டங்களுக்கு உள்பட்ட 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில், வாராணசி மாவட்டத்துக்கு உள்பட்ட 8 தொகுதிகளும் அடங்கும்.
  இந்நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரதமர் நரேந்திர மோடி வாராணசியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். வாராணசி மக்களவைத் தொகுதியில் மோடி போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.
  வாராணசிக்கு சனிக்கிழமை நண்பகலில் வரும் மோடி, முதலில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் செல்கிறார்.
  மேலும், கால பைரவர் ஆலயத்துக்கும் அவர் செல்கிறார். தொடர்ந்து, காசி வித்யாபீட பல்கலைக்கழக மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
  இதேபோல், வாராணசியில் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி சார்பில் நடைபெறும் பேரணியில் மாநில முதல்வரும், சமாஜவாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கூட்டாகப் பங்கேற்கின்றனர்.
  வாராணசி மாவட்டத்துக்கு உள்பட்ட ரோஹனியா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதனால், வாராணசி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai