சுடச்சுட

  

  பாஜகவை அதிக பொய் சொல்லும் பள்ளிக்கூடம் (ஹிந்தியில் - பஹூத் ஜூட் பாட்ஷாலா) என்றும் பிரதமர் நரேந்திர மோடி தான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
  இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் பிரதான செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  பிரதமர் மோடி தனது பதவியின் கண்ணியத்தை மிகவும் குறைத்துவிட்டார். இடுகாடு, சுடுகாடு குறித்து பேசும் அளவுக்கு அவருடைய அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. மத ரீதியாக பொதுமக்களைப் பிரிக்கப் பார்க்கிறார் மோடி. மேலும், சமுதாயத்தில் வெறுப்புணர்வை அவர் தூண்டி வருகிறார்.
  சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, "ரமலானின்போது மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது; ஹோலி, தீபாவளி பண்டிகைகளின்போது அல்ல' என்று மோடி பேசியதே இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.
  விவசாயிகளின் நலனுக்காக அவர் எதுவுமே செய்யவில்லை. மாறாக அவர்களுடைய பயிர்கள் சேதமடைந்தால் மட்டும் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், அவர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்று மோடி தெரிவிக்கிறார். இந்த வகைகளில் தான் விவசாயிகள் பணத்தைப் பெற வேண்டுமா?
  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை உயராத நிலையில், எரிவாயு உருளைகளின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டியதன் அவசியம் என்ன?
  பாஜக ஆட்சியில் பாலின ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது. பனாரஸ் (வாராணசி) ஹிந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாணவிகளுக்கு வழங்கப்படாததே இதற்கு சான்றாகும் என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai