சுடச்சுட

    

    அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்: சுஷ்மா சுவராஜ் கண்டனம்

    By DIN  |   Published on : 05th March 2017 09:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Sushma12

    புது தில்லி: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் மென் பெறியாளர் சீனிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹர்னீஸ் படேல் என்ற தொழிலதிபர் கொல்லப்பட்டார். மேலும், கென்ட் நகரில் சீக்கியர் ஒருவரை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கூறி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தொடரும் தாக்குதல் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு ஆளான தீப் ராய் தந்தை சர்தார் ஹர்பல் சிங்கிற்கு ஆறுதல் கூறியுள்ள சுஷ்மா, காயமடைந்த தீப் ராய் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஹர்னீஸ் படேல் கொலை சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக கூறிய சுஷ்மா, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai