Enable Javscript for better performance
உ.பி. தேர்தல்: 3-இல் 1 வேட்பாளர் மீது குற்றவியல் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    இதுகுறித்து, உத்தரப் பிரதேசத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளர்கள் அளித்த பிரமாணப் பத்திர விவரங்களை ஆய்வு செய்த "உத்தரப் பிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம்', ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 4,853 பேரில், 4,823 வேட்பாளர்கள் சமர்ப்பித்திருந்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தோம். அதில், அந்த 4,823 வேட்பாளர்களில் 859 பேர் மீது (18 சதவீதம்) குற்றவியல் வழக்கு உள்ளது தெரிய வந்தது. மேலும், 704 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
    வேட்பாளர்களில் 62 பேர் மீது கொலை வழக்கு, 148 பேர் மீது கொலை முயற்சி வழக்கு, 38 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும், அவர்களில் 10 பேர் மீது பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இதுதவிர, வேட்பாளர்களில் 30 சதவீதத்தினர், அதாவது 1,457 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai