Enable Javscript for better performance
காந்தியப் பொருளாதாரமே தொழில் வளர்ச்சிக்கு ஏற்றது: பிரணாப் முகர்ஜி- Dinamani

சுடச்சுட

    

    காந்தியப் பொருளாதாரமே தொழில் வளர்ச்சிக்கு ஏற்றது: பிரணாப் முகர்ஜி

    By DIN  |   Published on : 05th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pranab

    காந்தியப் பொருளாதாரமே தொழில் வளர்ச்சிக்கு ஏற்றது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
    இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் 9-ஆவது கீழ்மட்ட புத்தாக்க விருதுகள் (கிராஸ்ரூட் இன்னோவேஷன் அவார்ட்ஸ்) விழா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுமையை படைத்து சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
    உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சுற்றுச்சூழல், கைத்தொழில் சார்ந்த காந்தியப் பொருளாதாரம் பின்பற்றப்பட்டால் தொழில் வளர்ச்சி அடையும்.
    தேசப்பிதா மகாத்மா காந்தியின் கருத்துகள் இந்தச் சூழ்நிலையில் மிகவும் பொருந்தி போகும். சமூக அறிவு, அமைப்புகளுடன் நவீன அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை அவர் எப்போதும் விரும்பினார் என்றார் பிரணாப் முகர்ஜி.
    விருது வழங்கிய பிறகு கீழ்மட்ட புத்தாக்க கண்காட்சியையும் அவர் தொடக்கி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai