சுடச்சுட

  

  காஷ்மீர்: பல மணி நேர சண்டைக்குப் பின் பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

  By DIN  |   Published on : 05th March 2017 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் பல மணி நேரம் நடந்த சண்டைக்குப் பின் பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.
  இதுகுறித்து காவல்துறை அதிகாரியொருவர் சனிக்கிழமை கூறியதாவது: ஷோபியான் மாவட்டத்திலுள்ள சில்லிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்றனர்.
  அப்போது, அங்கிருந்து வெளிப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலை நிகழ்த்தினர். துப்பாக்கிச் சண்டை இரவு முழுவதும் நீடித்தது. காலையில், அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எனினும், பயங்கரவாதிகள் அதற்கு முன்னரே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இந்தச் சண்டையின்போது, இரு தரப்பிலும் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
  வாகனம் கவிழ்ந்து 6 வீரர்கள் காயம்: ஷோபியான் மாவட்டம், ஹெஃப் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் வாகனமொன்றில் ரௌடிகளை துரத்திச் சென்று கொண்டிருந்தனர்.
  அப்போது, அந்த வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இதில், 6 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 6 பேரும் அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai