சுடச்சுட

    

    குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    இதுதொடர்பாக, காந்திநகரிலுள்ள நில அதிர்வு ஆராய்ச்சி மைய அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், இது 4-ஆக பதிவாகியிருந்தது. மாவட்டத்திலுள்ள ராபார் நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்றார் அந்த அதிகாரி.
    இதனிடையே, நிலநடுக்கத்தால் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று கட்ச் மாவட்ட ஆட்சியர் எம்.ஏ.காந்தி தெரிவித்துள்ளார்.
    எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராபார், பச்சாவ் நகரங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai