சுடச்சுட

  

  கோழிக்கோடு அருகே தாக்குதல்: ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர் 5 பேர் படுகாயம்

  By DIN  |   Published on : 05th March 2017 09:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4 பேரும் பாஜக நிர்வாகி ஒருவர் காயமடைந்தனர்.

  கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கேரள முதல்வர் கொன்று வருகிறார். எனவே, ஒரு கொலைகார முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். அந்தத் தொகையை எனது சொத்துகளை விற்றுக் கொடுப்பேன் என்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் பேசுவதாக வெளியாகியுள்ள அந்த விடியோ பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சியும் இக்கருத்துக்கும் தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தது.

  இந்நிலையில், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

  இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர். தொடர்ந்து கேரளாவில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 4 பேரும், பாஜக நிர்வாகி ஒருவரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai