சுடச்சுட

    

    சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துகொள்வதில் இருந்து விலக்கு

    By DIN  |   Published on : 05th March 2017 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பதிவு செய்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசும், மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன.
    இதன்மூலம், அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 11-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் முன்பு நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தின் துணைச் சட்டங்களான மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றின் வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், அந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் தில்லியில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சம் ஈட்டும் சிறு நிறுவனங்களும், மற்ற மாநிலங்களில் ஆண்டு வருவாய் ரூ.20 லட்சம் ஈட்டும் சிறு நிறுவனங்களும் ஜிஎஸ்டி முறையில் பதிவு செய்துகொள்ளத் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வரிசெலுத்துபவர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்க நேரிடும் பட்சத்தில் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக தவணை முறையில் அவர்களிடம் இருந்து வரியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai