சுடச்சுட

  

  செல்வந்தர்களின் கடன்களை மட்டுமே மோடி ரத்து செய்கிறார்: ராகுல் காந்தி

  By DIN  |   Published on : 05th March 2017 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahulgandhi

  ""விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யாமல், செல்வந்தர்களின் கடன்களைத் தான் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்துள்ளது'' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பாத்ரா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
  அவர் மேலும் கூறியதாவது:
  ஏழை விவசாயிகள் பாக்கி வைத்துள்ள ரூ. 50,000 கோடி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். எனினும் இதற்கு அவர் உடன்படவில்லை.
  மாறாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்த 10 நாள்களுக்குள் ரூ. 70,000 கோடி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.
  விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யாமல் 50 பெரும் செல்வந்தர்களின் ரூ. 1.40 லட்சம் கோடி கடனைத்தான் தற்போதைய மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
  பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. தேர்தல் பிரசாரத்தின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
  மோடியின் ஆட்சியில், விவசாயிகள் தாம் விளைவிக்கும் பொருள்களுக்கு உரிய விலையைப் பெறுவதில்லை. காங்கிரஸ் தலைமையில் அரசு அமையும்போது இந்த வேறுபாடு களையப்படும்.
  உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால், மாநிலத்தில் 5 மகளிர் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 500-ம், 12-ஆம் வகுப்பு தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு ரூ. 30,000-மும் வழங்கப்படும்.
  மாநிலத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது, வட்டத் தலைநகராக உள்ள தூதி மாவட்டத் தலைநகராக தரம் உயர்த்தப்படும் என்றார் ராகுல் காந்தி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai