சுடச்சுட

    

    தந்தை, மகன் படுகொலை: துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம், போலீஸில் வேலை

    By DIN  |   Published on : 05th March 2017 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணாவில் தந்தை, மகன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானமும், காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலையும் அளிக்கப்படும் என்று போலீஸார் சனிக்கிழமை அறிவித்தனர்.

    இதுகுறித்து லூதியானா சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ்.கே. காலியா கூறியதாவது:
    லூதியானா அருகே, கடந்த மாதம் இரட்டைக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவருக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும், துப்பு கொடுத்தவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியும் அளிக்கப்படும். அவரது அடையாளம் வெளியிடப்படமாட்டாது.
    இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க, 16 தனி போலீஸ் படையை அமைத்துள்ளோம் என்றார் எஸ்.கே. காலியா.
    "தேரா சச்சா செளதா' ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த சத்பால் (65) என்பவரும், அவரது மகன் ரமேஷ் குமாரும் (35), லூதியானாவுக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள ஜகேரா என்னும் கிராமத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த அந்த மர்ம நபர்கள், தொப்பியும், முகமூடியும் அணிந்திருந்ததால், ரகசியக் கண்காணிப்புக் கேமராவில் அவர்களது உருவங்கள் பதிவாகியுள்ள நிலையிலும் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
    இதனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், போலீஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai