சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதியை மீறிவிட்டார் பிரதமர் மோடி: மாயாவதி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 05th March 2017 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mayavathi

    உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் தேர்தல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் பிரசாரம் மேற்கொண்டதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிவிட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.
    இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    வாராணசியில் தேர்தல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்று விதிமுறையை மீறுவது தவறானது மட்டுமல்ல; ஜனநாயகத்துக்கும் ஆபத்தானாது.
    பிரதமர் மோடியின் இத்தகைய செயலானது உத்தரப் பிரதேசத்தில் சரியான முறையில் தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
    இந்த விவகாரத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அப்போதுதான் உயர் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற தவறுகளை இனி செய்யமால் இருப்பார்கள் என்று மாயாவதி தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai