சுடச்சுட

    

    தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல்; ஐக்கிய ஜனதா தள பிரமுகர் கைது

    By DIN  |   Published on : 05th March 2017 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிகாரில் தொலைக்காட்சி நிருபர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கிய பிரமுகர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    இதுதொடர்பாக, சாப்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுசுயா ரான் சிங் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    ஐக்கிய ஜனதா தள கட்சியின் சரண் மாவட்ட முன்னாள் தலைவர் தினேஷ் குமார் சிங் என்பவரால் நடத்தப்படும் உணவகத்தில் மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதாக கலால் மற்றும் ஆயத் தீர்வைத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது மதுபான புட்டிகள் கைப்பற்றப்பட்டன.
    இந்நிலையில், தொலைக்காட்சி நிருபர் சந்தோஷ் குப்தா என்பவர் தான் கலால் மற்றும் ஆயத் தீர்வைத் துறைக்கு தகவல் தெரிவித்ததாக சந்தேகப்பட்ட தினேஷ் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
    இதுதொடர்பாக, சந்தோஷ் குப்தா அளித்த புகாரின்பேரில் தினேஷ் பாட்னாவில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். விரைவில், அவர் சாப்ராவுக்கு அழைத்து வரப்படுவார் என்றார் அனுசுயா ரான் சிங்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai