Enable Javscript for better performance
பலாத்கார வழக்கு: உ.பி. அமைச்சர் பிரஜாபதியின் கடவுச்சீட்டு பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பலாத்கார வழக்கு: உ.பி. அமைச்சர் பிரஜாபதியின் கடவுச்சீட்டு பறிமுதல்

    By DIN  |   Published on : 05th March 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை தேடப்படும் நபராக அறிவித்து, காவல்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
    இதுதொடர்பாக அந்த மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு) தல்ஜித் சௌத்ரி, லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜாபதி உள்பட 7 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பிரஜாபதி, வெளிநாடு தப்பிவிடாமல் தடுப்பதற்காக அவரது கடவுச் சீட்டை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், அவரது கடவுச் சீட்டை ரத்து செய்யக் கோரி, வெளியுறவுத் துறையை விரைவில் அணுகவுள்ளோம்.
    பிரஜாபதியை தேடப்படும் நபராக அறிவித்து, லக்னௌ, கான்பூர், அமேதி உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். அவர் நேபாளத்துக்கு தப்பிவிடாமல் இருப்பதற்காக, உத்தரப் பிரதேசம்-நேபாள எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சஷாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) படையினரை
    உஷார்படுத்தியுள்ளோம் என்றார் சௌத்ரி.
    முன்னதாக, பிரஜாபதி வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், அவரது நடமாட்டத்தை காண்காணிக்கும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தகவல் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai