சுடச்சுட

  

  பள்ளியில் மதிய உணவு சாப்பிட ஆதார்: நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் முடிவு

  By DIN  |   Published on : 05th March 2017 11:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றுவோரும், அதில் சாப்பிடும் மாணவர்களும் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பு திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி மார்ச் 9-ஆம் தேதி தொடங்குகிறது. இதில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் தெரிக் ஒ' பிரையன் நோட்டீஸ் அளித்துள்ளார். விதி 267-ன் கீழ் நாடாளுமன்றத்தின் மற்ற பணிகளை ஒத்திவைத்து விட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்களும், அதில் பயனடையும் மாணவர்களும் தங்கள் ஆதார் எண்ணை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
  இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். "மதிய உணவுத் திட்டத்தின்கீழ் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கூட பயனடைகிறார்கள். அவர்களுக்கும் கூட ஆதார் அட்டையைக் கேட்பது ஏன்?. ஏழைக் குழந்தைகளைப் பற்றி கவலையில்லாத மத்திய அரசு அவர்களின் உரிமையைக் கூட பறிக்கிறது' என்று மம்தா குற்றம்சாட்டினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai