சுடச்சுட

    

    பிரஜாபதியைக் கைது செய்வதே பாஜக அரசின் முதல் பணி: அமித் ஷா

    By DIN  |   Published on : 05th March 2017 11:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amithsha

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகு, பாலியல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் காயத்ரி பிரஜாபதியைக் கைது செய்வதே முதல் பணி என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
    உத்தரப் பிரதேச மாநில பேரவைக்கான கடைசி மற்றும் ஏழாவது கட்டத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம், அம்பேத்கர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில், வரும் 11-ஆம் தேதி பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காயத்ரி பிரஜாபதியைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சிறைக்கு அனுப்பி வைப்போம்.
    பாலியல் புகாரில் சிக்கியுள்ள காயத்ரி பிரஜாபதியைக் கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இந்த நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்காக சமாஜவாதி கட்சியை ஆதரித்து பிரஜாபதி சுமார் 6 நாள்கள் பிரசாரம் செய்தார். அதுமட்டுமன்றி, கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி அவர் வாக்களிக்கவும் செய்தார். ஆனால், அவரை போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை. குற்றவாளியைப் பிடித்து, சிறையில் அடைப்பதுதானே காவல் துறையினரின் பணி. மற்றொரு புறம், அவரை சரணடையுடமாறு முதல்வர் அகிலேஷ் யாதவ் கெஞ்சுகிறார்.
    "திட்டங்கள்தான் பேச வேண்டும்' என்று அகிலேஷ் யாதவ் கூறுகிறார். உண்மையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு அகிலேஷின் தீவினைகள்தான் பேசுகின்றன.
    பிரதமர் நரேந்திர மோடியின் "நல்ல நாள்கள் வரும்' என்ற முழக்கத்தை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றன. வரும் 11-ஆம் தேதி பாஜக ஆட்சியமைத்தவுடன், உத்தரப் பிரதேசத்தில் "நல்ல நாள்கள்' தொடங்கும் என்பதை இங்கு ஒலிக்கும் ஆதரவுக் குரல்கள் உறுதிப்படுத்துகின்றன என்றார் அமித் ஷா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai