சுடச்சுட

  

  மக்களை மயக்குவதை விட்டு விட்டு, மக்கள் பிரச்னைகளை தீர்க்க மோடி ஆர்வம் காட்டவேண்டும்: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 05th March 2017 08:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரு: மக்களை மயக்குவதை காட்டிலும், மக்கள் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டவேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்துள்ளார்.

  இது குறித்து கர்நாடகமாநிலம், கலபுர்கியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
  அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவாத தாக்குதல் நடந்துவந்தபோதிலும் அது குறித்து மத்திய அரசு எதையும் கூறாமல் மௌனம் காப்பது கண்டனத்திற்குரியதாகும்.

  அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிடம் பிரதமர் மோடி உடனடியாக பேசி, இனிமேலும் இதுபோன்ற வன்முறை தாக்குதல் நடக்காமல் தடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

  மொத்த உற்பத்திப்பொருள் விகிதம்(ஜிடிபி) குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் பொய் மூட்டையாகும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் இலக்கை குறைத்து காண்பித்து, ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளதாக காட்டியிருக்கிறார்கள்.

  ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பொய்யான புள்ளிவிவரங்களை கொண்ட ஜிடிபி விகிதத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக தெருத்தெருவாக திரிந்து பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை எல்லோரும் கேலிபேச தொடங்கியுள்ளனர்.

  தன் மீதுள்ள நற்பெயருக்காக நாட்டுமக்கள் வாக்களிப்பார்கள் என்ற பிரமையில் பிரதமர்மோடி மிதந்துவருகிறார். பேசிபேசி மக்களை மயக்குவதை காட்டிலும், மக்கள் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடி ஆர்வம்காட்டவேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai