மது பாட்டில்களுடன் காரில் வந்த ஆர்ஜேடி மாநில நிர்வாகி கைது
By DIN | Published on : 05th March 2017 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முழு மது விலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தில் 16 மதுபான பாட்டில்களை காரில் எடுத்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் (ஆர்ஜேடி) மாநில நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்ஜேடியின் மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் துணைத் தலைவர் ரேணு யாதவும், அவருடன் அஜீத் குமார் யாதவ், ஷியாம் குமார் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இரவு காரில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், அதிலிருந்து 16 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மதுபான பாட்டில்கள் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து பிகாரில் உள்ள மதேபுரா மாவட்டத்துக்கு எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து, ரேணு யாதவும், உடன் வந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை
தெரிவித்தார்.