சுடச்சுட

  

  மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டம்

  By DIN  |   Published on : 06th March 2017 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election-commision

  மின்சாரம் மற்றும் குடிநீர்க் கட்டண பாக்கி வைத்திருப்பவர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
  இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
  அரசின் மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகிய சேவைகளைப் பெற்றுக் கொண்டு, அதற்கான கட்டணங்களை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்களை, தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்களாக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக, அந்தச் சட்டத்தில் தேர்தல் குற்றங்களை வரையறுக்கும் 3-ஆவது அத்தியாயத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
  ஏற்கெனவே, மத்திய, மாநிலத் தேர்தல்களில் ஒருவர் போட்டியிட வேண்டுமென்றால், அவர் மின்சார வாரியத்திடமிருந்தும், குடிநீர் வாரியத்திடமிருந்தும் "நிலுவை இல்லாச் சான்றிதழ்' பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு கேட்டுக்கொண்டது.
  அதனைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், தங்கள் பிரமாணப் பத்திரத்துடன் மின்சார, குடிநீர் வாரியங்களிடமிருந்து பெற்ற சான்றிதழை இணைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
  அரசுக் குடியிருப்புகளில் வசிப்பவர்களாக இருந்தால், வாடகை பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழை வீட்டு வசதி வாரியத்திடமிருந்து பெற்று இணைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
  எனினும், இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேட்பாளர்கள் லஞ்சம் கொடுத்து சான்றிதழ்களைப் பெறுவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai