Enable Javscript for better performance
முன்னாள் எம்.பி. சஹாபுதீன் மறைவு- Dinamani

சுடச்சுட

    
    syedshahabussin

    மூன்று முறை எம்.பி.யாக பதவி வகித்தவரும், முன்னாள் அயல்நாட்டு த் தூதருமான சையது சஹாபுதீன், உடல் நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.
    உத்தரப் பிரேதச மாநிலம், நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற சஹாபுதீன் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை சரியில்லை.
    இந்நிலையில், சனிக்கிழமை காலை 5.20 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கடந்த 1935-ஆம் ஆண்டு சஹாபுதீன் பிறந்தார். 1958-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1959-ஆம் ஆண்டு முதல் 1961-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியத் தூதராகவும், துணைத் தூதராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார்.
    கடந்த 1979-ஆம் ஆண்டு பிகாரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக சஹாபுதீன் தேர்வு செய்யப்பட்டு, 1984-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை அவர் வகித்தார். அதேபோல், கிஷண்கஞ்ச் தொகுதியிலிருந்து 1985-ஆம் ஆண்டு ஒரு முறையும், 1991-ஆம் ஆண்டு மற்றொரு முறையும் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இரங்கல் தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்கு தில்லியில் சனிக்கிழமை நடந்து முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai